Skip to content
அம்ச துர்கா
Gangaikonda Cholapuram

Shaiva temple

Gangaikonda Cholapuram

கங்கைகொண்ட சோழபுரம்

Gangaikonda Cholapuram, Ariyalur district, Tamil Nadu, India

Details are compiled from Wikimedia projects and published temple sources. Send a correction if something is wrong. Report a correction

This account is in Tamil.

Overview

Shiva as Shiva

lingam

Shaiva temple

Chola Architecture

கங்கைகொண்ட சோழீசுவரர் கோயிலை தஞ்சைப் பெருவுடையார் கோயிலைக் கட்டிய முதலாம் இராசராச சோழனின் மகனான இராசேந்திர சோழன் (பொ.ஊ. 1014-44) பொ.ஊ. 1035இல் கட்டினார். முதலாம் இராசேந்திரன் ஆட்சிக்கு வந்த ஆறாம் ஆண்டில் (பொ.ஊ. 1020) கட்டப்பட்டதாக சில வரலாற்றாய்வாளர்கள் கருதினாலும், கல்வெட்டுகளின்படி இக்கோயில் கட்டப்பட்ட ஆண்டு முதலாம் இராசேந்திரன் ஆட்சிக்கு வந்த இருபதாம் ஆண்டான பொ.ஊ. 1035 ஆகும். கங்கை வரை சென்று பாலப் பேரரசை வெற்றிகொண்ட முதலாம் இராசேந்திரன், தன் தந்தை கட்டியக் கோயிலைப் போன்று தானும் ஒரு கோயில் கட்ட விரும்பினான். இடைக்காலச் சோழத் தலைநகராக விளங்கிய தஞ்சாவூரிலிருந்து தான் புதிதாக நிர்மாணித்த கங்கைகொண்ட சோழபுரம் ஊரைத் தனது தலைநகராக முதலாம் இராசேந்திரன் மாற்றியதிலிருந்து தொடர்ந்து அடுத்த 250 ஆண்டுகளுக்கு கங்கைகொண்ட சோழபுரமே சோழர்களின் தலைநகரமாக விளங்கியது. கல்வெட்டுகளிலிருந்தும் 1980களின் அகழ்வாய்வுகளின்படியும் கோட்டைச் சுவர்கள், அரண்மனைகள், நடுவிலமைந்த கோயில் என கங்கைகொண்ட சோழபுரம் நன்கு திட்டமிட்டு அமைக்கப்பட்ட நகரமாக இருந்தது தெரியவருகிறது. தஞ்சை பெருவுடையார் கோயிலுக்குரிய நன்கொடைகளையெல்லாம் இராசேந்திரன் இக்கோயிலுக்குத் திருப்பிவிட்டானென்றும், பெருவுடையார் கோயிலைக் கட்டிய கட்டிடக் கலைஞர்களையும் சிற்பிகளையும் தஞ்சாவூரிலிருந்து இங்கு வரவழைத்து இக்கோயிலைக் கட்டச் செய்தான் என்றும் கருதப்படுகிறது.

History and tradition

Period
Present structure completed 11th century CE. Built by Rajendra Chola I.
Architecture
Chola architecture
Inscriptions
Tamil
First attested
11th century
Heritage
UNESCO
Sthala puranam

கங்கைகொண்ட சோழீசுவரர் கோயிலை தஞ்சைப் பெருவுடையார் கோயிலைக் கட்டிய முதலாம் இராசராச சோழனின் மகனான இராசேந்திர சோழன் (பொ.ஊ. 1014-44) பொ.ஊ. 1035இல் கட்டினார். முதலாம் இராசேந்திரன் ஆட்சிக்கு வந்த ஆறாம் ஆண்டில் (பொ.ஊ. 1020) கட்டப்பட்டதாக சில வரலாற்றாய்வாளர்கள் கருதினாலும், கல்வெட்டுகளின்படி இக்கோயில் கட்டப்பட்ட ஆண்டு முதலாம் இராசேந்திரன் ஆட்சிக்கு வந்த இருபதாம் ஆண்டான பொ.ஊ. 1035 ஆகும். கங்கை வரை சென்று பாலப் பேரரசை வெற்றிகொண்ட முதலாம் இராசேந்திரன், தன் தந்தை கட்டியக் கோயிலைப் போன்று தானும் ஒரு கோயில் கட்ட விரும்பினான். இடைக்காலச் சோழத் தலைநகராக விளங்கிய தஞ்சாவூரிலிருந்து தான் புதிதாக நிர்மாணித்த கங்கைகொண்ட சோழபுரம் ஊரைத் தனது தலைநகராக முதலாம் இராசேந்திரன் மாற்றியதிலிருந்து தொடர்ந்து அடுத்த 250 ஆண்டுகளுக்கு கங்கைகொண்ட சோழபுரமே சோழர்களின் தலைநகரமாக விளங்கியது. கல்வெட்டுகளிலிருந்தும் 1980களின் அகழ்வாய்வுகளின்படியும் கோட்டைச் சுவர்கள், அரண்மனைகள், நடுவிலமைந்த கோயில் என கங்கைகொண்ட சோழபுரம் நன்கு திட்டமிட்டு அமைக்கப்பட்ட நகரமாக இருந்தது தெரியவருகிறது. தஞ்சை பெருவுடையார் கோயிலுக்குரிய நன்கொடைகளையெல்லாம் இராசேந்திரன் இக்கோயிலுக்குத் திருப்பிவிட்டானென்றும், பெருவுடையார் கோயிலைக் கட்டிய கட்டிடக் கலைஞர்களையும் சிற்பிகளையும் தஞ்சாவூரிலிருந்து இங்கு வரவழைத்து இக்கோயிலைக் கட்டச் செய்தான் என்றும் கருதப்படுகிறது. முதலாம் இராசேந்திர சோழனுக்குப் பின் வந்த பெரும்பாலான சோழ அரசர்கள் கங்கைகொண்ட சோழபுரத்தில் முடிசூட்டிக் கொண்டனர். இவ்வரசனுக்கு அடுத்து ஆட்சிக்குவந்த முதலாம் குலோத்துங்க சோழன் இந்நகரைச் சுற்றி கோட்டைச் சுவர்கள் கட்டினான். 13-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தங்களது முந்தைய தோல்விகளுக்குப் பழிவாங்கும் நோக்கில் பாண்டியர்கள் சோழர்களை முறியடித்து இந்நகரை அழித்தனர். கோவிலையும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளையும் தவிர, இந்நகரின் அரண்மனைகள் உள்ளிட்ட பிறயாவும் அழிக்கப்பட்டன.

Worship

Festivals

  • Maha Shivaratri, Sadhaya vila

Visit information

The Brihadeeswarar Temple is located near the village of Gangaikonda Cholapuram, about southwest of Chennai and from Chidambaram. Roughly to the northeast is the similarly named Chola dynasty era Brihadeeswarar Temple in Thanjavur, and is about to the northeast of the Airavatesvara Temple. All three are UNESCO world heritage sites. The temple is on Highway 81 connecting Tiruchirappalli and Chidambaram. The nearby city of Chidambaram is connected to other major cities by daily trains on the Indian railway network, Tamil Nadu bus services and National Highways 36, 81, and 245. The nearest airport with regular services is Tiruchirappalli International Airport (IATA: TRZ), about away. Though inland, the temple is near the Kollidam River, within the Cauveri River delta with access to the Bay of Bengal and through it to the Indian Ocean.

Sources

Details are compiled from Wikimedia projects and published temple sources. Send a correction if something is wrong.

More links