History and tradition
Temple tree
மாமரம்
Theertham
- நாகதீர்த்தம் · Temple tank

Shaiva temple
பாமணி
Paadaaleeswaram, Tiruvarur district, Tamil Nadu, India
Details are compiled from Wikimedia projects and published temple sources. Send a correction if something is wrong. Report a correction
This account is in Tamil.
Shiva as Naganathar
Consort அமிர்த நாயகி
lingam
Shaiva temple
தனஞ்சயர் வடிவில் ஆதிசேஷன் வந்து தரிசனம் செய்ததால் தனஞ்சயருக்கு சந்நிதி உள்ளது. இறைவனார் காமதேனுவுக்கு அருள்புரிந்த தலம் இத்தலத்தை குரு தோஷ நிவர்த்தி மற்றும் ராகு கேது பரிகாரத்தலமாக அறியப்படுவது தொடர்பாக ஒரு வரலாறு இங்கு பேசப்பட்டு வருகிறது. மக்கள் இந்தத் தலம் கால சர்ப்ப தோஷ பரிகாரத் தலம் என்று கருதுகின்றனர். சுயம்பு மூர்த்தியாய் மண்ணால் ஆன மூலவரான பாமணி நாகநாதர் என்றழைக்கப்படுகின்ற நாகநாதர் என்ற பெயர் கொண்ட லிங்கத் திருமேனியில் அமைந்து அருள் பாலித்து வருகின்ற மூவரான இறைவனுக்கு தினமும் அபிஷேகம் நடைபெற்று வருகிறது. இந்தத் தலத்தில் உள்ள இந்த மூலவர் சுவாமியின் மேல் பாம்புகள் அடிக்கடி ஊர்ந்து செல்ல ஆரம்பித்தன. பாம்புகள் ஊர்ந்ததால் அவருக்கு பாம்பை மேலே அணிந்துகொள்பவர் என்னும் வகையில் பொருள்பட பாம்பணி நாதர் என்ற பெயரைக் கொண்டு அழைக்கலாயினர். அதன் காரணமாக இந்த ஊர் பாம்பணி என்று அழைக்கப்பட்டு வந்தது. பின்னர் நாளடைவில் அச்சொல்லானது மருவி பாமணி என்ற பெயரைப் பெற்றது. பாம்பணி நாதரை வணங்கும் எண்ணத்தில் ஆதிசேஷன் தனஞ்செய முனிவராய் வடிவத்தினை மேற்கொண்டு இங்கு வந்தார். அவ்வாறு வந்தபோது எங்கும் லிங்கத் திருமேனிகளாய் தோன்ற ஆரம்பித்தன. அவர் என்ன செய்வதென்று தெரியாமல் திகைக்க ஆரம்பித்தார். பின்னர் ஒரு முடிவெடுத்தார். அதன்படி கால் தரையில் படாமல் சுவாமியை தொட்டு வணங்க எண்ணினார். அவ்வாறு வணங்குவதற்கு வசதியாக இடுப்பிற்குக் கீழே பாம்பு வடிவத்தையும், இடுப்புக்கு மேலே மனித வடிவத்தையும் கொண்டு மூலவரை வணங்கினார். அவருடைய இவ்வாறான பக்தி வெளிப்பாட்டை அறிந்த இறைவன் மகிழ்ந்தார். உடனே அவருக்கு வந்து காட்சி கொடுத்தார். அதே உருவத்தில் இருந்து அவருடைய பக்தர்களை ராகு, கேது கால ஸர்ப்ப தோஷ நிவர்த்தி வழங்கும்படி இறைவன் அவருக்குக் கட்டளை இட்டார். அவரும் இறைவன் ஆணையை சிரமேற்கொண்டு அப்பணியைச் செவ்வனே செய்ய ஆரம்பித்தார். அதன் காரணமாக இத்தலத்தில் பரிகாரம் செய்யும்போது சர்ப்ப தோஷம் மறைந்து விடுவதாகவும், தொடர்ந்து யோகம் ஏற்படுவதாகவும் மக்கள் நம்புகின்றனர்.
மாமரம்
Details are compiled from Wikimedia projects and published temple sources. Send a correction if something is wrong.