History and tradition
- Architecture
- Dravidian architecture
Sthala puranam
கயிலைநாதன் எழுந்தருளியுள்ள திருக்கோவிலை கண்டு வழிபட எண்ணிய நம்பியாரூரராம் சுந்தரமூர்த்தி சாமிகள் திருவாரூரிலிருந்து புறப்பட்டு நன்னிலம், திருவாஞ்சியம், ஆவடுதுறை, நாகேச்சரம், கண்டியூர் போன்ற தலத்தை தரிசித்து திருவாலம் பொழிலையைடைந்து இறைவனை வழிபட்டு அன்றிரவு தங்கியிருந்த போது அவர் கனவில் சிவபெருமான் தோன்றி "மழபாடிக்கு வருவதற்கு மறந்தாயோ" என்று வினவி மறைந்தார். பின் வடகரையை அடைந்து திருமழபாடி ஈசனாரை தரிசித்து, "பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கு அசைத்து மின்னார் செஞ்சடைமேல் மிளிர் கொன்றை அணிந்தவனே மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே அன்னே உன்னை அல்லால் இனியாரை நினைக்கேனே" என்ற தேவார திருப்பதிகத்தை பாடிப்போற்றினர். இந்த மழப்பாடி ஈசனை சுந்தரர் காலத்துக்கு முன்பே திருஞானசம்பந்தர் கண்டு "காச்சிலாத பொன்னோக்கும் கனகவயிரத்தின் ஆச்சிலதா பளிங்கினன் மழப்பாடி வள்ளல்" என்று போற்றியுள்ளார். திருநாவுக்கரசரோ "மரு சுடரின் மாணிக்கக்குன்று கண்டாய் மழப்பாடி மண்ணும் மணாளன் தானே " என்று மழப்பாடி ஈசனை போற்றியுள்ளார்.
Hymn
The pathigam number is not yet recorded.
Temple tree
பனை மரம்
Theertham
- கொள்ளிடம், லட்சுமி, சிவகங்கை · Temple tank
