History and tradition
- Architecture
- Dravidian architecture, rock-cut architecture
- First attested
- 9th century
- Heritage
- Archaeological Survey of India
Sthala puranam
இந்த சத்திய புஷ்கரணி திருமாலின் அஷ்டாச்சரம் போல எண் கோணமாய் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இதனை கட்டியவர் காரைக்குடி மெ.முருகப்ப செட்டியார் மகன் இராமநாதன் செட்டியார். கட்டி முடிக்கப்பட்ட ஆண்டு 1919. == கல்வெட்டுகள் == திருமெய்யம் பெருமாள் கோவில் வளாகத்தில் 30 கல்வெட்டுகள் கண்டறியப்பட்டு படியெடுக்கப்பட்டுள்ளன. இவற்றுள் 14 கல்வெட்டுகளை புதுக்கோட்டை மாநிலக் கல்வெட்டுகள் தொகுதி பதிப்பித்துள்ளது. தென்னிந்தியக் கல்வெட்டுகள் 22 ஆம் தொகுதி, பிரிவு இரண்டில் ஒரு கல்வெட்டும், நா.வள்ளி என்பவாரால் நான்கு கல்வெட்டுகளும் பதிப்பிக்கப்பட்டுள்ளன. == குடைவரையின் காலம் == பிற்காலக் கல்வெட்டு ஒன்று, குடைவரையின் சீரமைத்தலைப் குறிப்பிடுகிறது. இக்கல்வெட்டு திருமெய்யம் கோவிலுடன் தொடர்புபடுத்தப்படுகிறது. இக்கல்வெட்டு விடேல் விடுகு என்றும் விழுப்பேர் அதியரைசன் என்றும் அறியப்பட்ட முத்தரைய அரசர் சாத்தன் மாறனின் ஆட்சிக்காலத்தைச் சேர்ந்தது. முத்தரையர்கள், பல்லவர்களின் ஆட்சிக்கு உட்பட்ட சிற்றரசர்களாக விளங்கினர். விடேல் விடுகு என்பது இவர்கள் சூடிக்கொண்ட பட்டப்பெயராகும். சாத்தன் மாறனின் தாயான பெரும்பிடுகுப் பெருந்தேவி இக்குடைவரையின் முகப்பை ஒட்டித் தூண்கள் அமைத்து சீரமைத்துள்ள செய்தி இக்கல்வெட்டில் பதிவாகி உள்ளது. புதுக்கோட்டை மாநிலக் கல்வெட்டுகள் தொகுதியில் 13 ஆம் எண்ணுடன் பதிவாகியுள்ள இக்கல்வெட்டே திருமெய்யம் கோவில் கல்வெட்டுகளுள் காலத்தால் முந்தையது ஆகும். ஆகவே இக்குடைவரைக் கோவிலின் தொன்மை இக்கல்வெட்டின் காலத்திற்கும் முந்தையது ஆகும். == திருமங்கையாழ்வார் பாடிய தலம் == ஆழ்வார்கள் பாடியருளிய (மங்களாசாசனம் செய்யப்பட்ட) 108 திவ்ய தேசங்களுள் திருமெய்யம் 106ஆவது திவ்யதேசம் ஆகும். ஆழ்வார்களால் பாடல்பெற்ற 18 திவ்ய தேசங்கள் பாண்டிய நாட்டில் அமைந்துள்ளன. திருமங்கை ஆழ்வார் தனியாக சென்று 46 திவ்யதேசங்களில் மங்களாசாசனம் செய்துள்ளார். திருமெய்யமும் இவற்றுள் ஒன்றாக இடம்பெற்றுள்ளது. திருமெய்யரைப் போற்றி திருமங்கை ஆழ்வார் பாடியருளிய ஒன்பது பாசுரங்கள் பெரியதிருமொழி (பாசுரம் எண்: 1090, 1206, 1524, 1660, 1760, 1852, 2016,) திருக்குறுந்தாண்டகம் (பாசுரம் எண்: 2050) மற்றும் சிறிய திருமடல் (பாசுரம் எண்: 2674) ஆகிய தொகுதிகளில் இடம்பெற்றுள்ளன. திருமங்கையாழ்வார் திருமெய்யம் பெருமாளை எட்டு இடங்களில் "மெய்யமலையான்," "திருமேய மலையாளன்" "திருமெய்ய மலையாளர்", "மெய்ய மலையாளர்", "மெய்யம் அமர்ந்த பெருமாள்", "மெய்ய மணாளர்", "மெய்யத்து இன்னமுத வெள்ளம்" என்றெல்லாம் போற்றியுள்ளார் (பார்வை: திருமங்கயாழ்வார் பாசுரங்கள்: திருமங்கையாழ்வார் 1206, 1524, 1660, 1760, 1852, 2016, 2674 (126). ==கோயில் நடைதிறந்திருக்கும் நேரம்== காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை ==சிற்பக்கலை சிறப்பு== தசாவதார மண்டபத்தில் உள்ள தூண்களில் உள்ள சிற்பங்கள் சிறப்பானவை. தூண்களில் உள்ள தசாவதார திருக்கோலங்கள் மற்றும் துவஜஸ்தம்பத்திற்கு அருகில் உள்ள தூணில் உள்ள ராமாவதாரம் மற்றும் வாமன அவதாரம் சிற்பங்கள் அழகு வாய்ந்தவை. ==வேண்டுதல்கள்== குழந்தைப்பேறு இல்லாதோர், பேய் பிசாசு பிடித்தவர்கள், நரம்புத்தளர்ச்சி நோயில் துன்புறுபவர்கள் நலம் பெற தாயாரிடம் வேண்டுதல்கள்.
Hymn
- Tirumangai Alvar
The pasuram is not yet recorded.
Temple tree
ஆல மரம்
Theertham
- சத்ய புஷ்கரணி · Temple tank
