History and tradition
- Period
- Present structure completed 9th century CE. Built by Cholas.
- Architecture
- Tamil architecture
- First attested
- 7th century
- Heritage
- Archaeological Survey of India
Sthala puranam
துவக்கத்தில் திருமாலுக்கும் அவரது நாபியில் இருந்து வெளிவந்த பிரம்மனுக்கும் தலங்களுள் யார் பெரியவர் என்ற சண்டை வர, அப்போது அவர்களுக்கு எதிராக சோதிப் பிழம்பாய் இலிங்க உருவில் நீண்டு வளர்ந்து முதலும் முடிவும் இல்லாது நின்றார் சிவபெருமான். இருவருள் தனது அடி அல்லது முடியை யார் முதலில் அடைகிறாரோ அவரே பெரியவர் என்று சிவபெருமான் சொல்ல, திருமால் வராகம் எனும் வடிவம் எடுத்து பூமியைப் பிழந்து கீழே திருவடிகளைத் தேடிச் சென்றார். பிரம்மன் அன்னப்பறவை வடிவம் எடுத்து முடியைத் தேடிச் சென்றார். இந்நிகழ்வை தேவாரத்தில் திருஞானசம்பந்தர் எனப் பாடி விவரித்துள்ளார். அதாவது நான்முகனும், திருமாலும் தேடத்தேட சிவபெருமான் முதலும் முடிவும் இல்லாமல் வளர்ந்துக்கொண்டே போனார். அச்சோதிப் பிழம்பே திருவண்ணாமலையென்பது சைவர்களின் நம்பிக்கையாகும். அதைத் தேவாரத்தில் அதாவது, கடல் வண்ணனான திருமாலும், தாமரை மேல் அமர்ந்த பிரம்மனும் அளவிட முடியாத வண்ணம் (வணமென திரிந்தது) அழலாக (தீயாக) நின்ற அண்ணாமலையார் என்பது இதன் பொருள். ஆணோடு பெண்ணும் சரிசமம் என்பதை அக்காலத்திலேயே உணர்த்த சிவபெருமானிடம் உமையம்மை அவருள் சரிபாதி கேட்டாள். இத்தலத்தில் தான் சிவபெருமான் தன்னுள் சரிபாதியை உமையம்மைக்கு அருளினார். இதை தேவாரத்தில் "உண்ணாமுலை உமையாளொடு உடனாகிய ஒருவன் பெண்ணாகிய பெருமான் மலை திருமாமணி திகழ" என்று சம்பந்தர் குறிப்பிடுகிறார். ஒவ்வொரு வருடமும் இதைக் கொண்டாடக் கார்த்திகை விளக்கீடுதிருநாள் அன்றுத் திருவண்ணாமலை கோவிலில் மலை உச்சியில் தீபம் ஏற்றப்படும் நேரத்தில் கோவிலில் சிவபெருமான் மாதொருபாகனாக (அர்த்தநாரீஸ்வரர்) அலங்கரிக்கப்பட்டு வெளியே காட்சி தருவார் இதைப் பல லட்சம் பக்தர்கள் நேரிலும், செய்தி ஊடகங்கள் வாயிலாகத் திரையிலும் காண்பர்.
Hymn
The pathigam number is not yet recorded.
Theertham
- 360 sacred tirthas · Temple tank
