Skip to content
அம்ச துர்கா
Vijayamangai

Shaiva temple

Vijayamangai

திருவிஜயமங்கை

Vijayamangai, Tamil Nadu, India

Details are compiled from Wikimedia projects and published temple sources. Send a correction if something is wrong. Report a correction

This account is in Tamil.

Overview

Shiva as Vijayanatheswarar

Consort மங்கள நாயகி, மங்கை நாயகி, மங்களாம்பிகை

lingam

Shaiva temple

பஞ்சபாண்டவர்களில் ஒருவரான அர்ஜுனன் (விஜயன்) வழிபட்ட தலம். இதனால் ஈசனுக்கு விஜயநாதர் எனபெயர் வந்தது. விஜயமங்கை என்பது கோவில் பெயரே; ஊரின் பெயர் கோவந்தபுத்தூர் (கோ கறந்த புத்தூர்). சிவலிங்கத் திருமேனியின்மீது பசு தானே பாலை சுரந்து வழிபட்ட தலம். குருஷேத்திரப் போரின் போது அர்ஜூனன் பாசுபதாஸ்திரம் ஈசனிடம் பெற வேண்டி இவ்வாலயத்தில் கடும் தவம் செய்தார். பாசுபதாஸ்திரத்தை அர்ஜூனன் பெற்றால் பெரும் ஆபத்து என்பதை உணர்ந்த துரியோதனன் முகாசுரன் என்பவனை அனுப்பி தவத்தைக் கலைக்கச் சொன்னான். முகாசுரன் பன்றியின் உருவெடுத்து அர்ஜூனனைத் தாக்க பாய்ந்த போது பக்தனைக் காப்பாற்ற நினைத்த ஈசன் வேடன் உருகொண்டு பன்றியைக் கொன்றார். பன்றியைக் கொன்றது குறித்து சொற்போரும் விற்போரும் நடந்தது. அர்சுனன் வில் முறிந்தது. முறிந்த வில் கொண்டு வேடன்முடி நோக்கி அம்பு எய்தார்; முடியில் பட்ட அம்பு, உலக உயிர்கள் அனைத்தின் மீதும் பட்டது. அர்ஜுனன் முன் இறைவன் தோன்றினார். அர்ஜுனன் தன் செயலுக்கு மன்னிப்பு கேட்டு பணிந்தார். ஈசன் விஜயனான அர்ஜூனனுக்கு பாசுபதாஸ்திரத்தை அருளினார். இன்றும் இவ்வாலய லிங்கத் திருமேனியில் அம்பு பட்ட தழும்பு கோடு போல் காணப்படுகிறது. திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும் தொழ வரும்பொழுது கொள்ளிடத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. எனவே தென்கரையில் இருந்தபடியே பதிகம் பாடினர். அப்போது இவர்களுக்குக் காட்சி தரும் பொருட்டு விநாயகரும் முருகப்பெருமானும் தெற்கு நோக்கி திரும்பினர். இன்றும் இவ்வாலய விநாயகரும் முருகரும் தென்திசை நோக்கி இருப்பதைக் காணலாம்.

History and tradition

Hymn

The pathigam number is not yet recorded.

Theertham

  • அர்ஜுன தீர்த்தம், மண்ணியாறு, கொள்ளிடம் · Temple tank

Visit information

Thiruvijayamangai is situated at a distance of 4 kilometres from Thiruppurambiyam in Thanjavur district and 11 kilometres from Kumbakonam.

Sources

Details are compiled from Wikimedia projects and published temple sources. Send a correction if something is wrong.

More links