சாக்தக் கோயில்
பன்னாரி
Bannari
பன்னாரி, ஈரோடு மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா
விவரங்கள் விக்கிமீடியா திட்டங்களிலிருந்தும் வெளியிடப்பட்ட கோயில் ஆதாரங்களிலிருந்தும் தொகுக்கப்பட்டவை. தவறு இருந்தால் திருத்தம் அனுப்புங்கள். திருத்தம் தெரிவிக்கவும்
மேலோட்டம்
அம்மன்
சுயம்பு மூலவர்
சாக்தக் கோயில்
பண்ணாரி மாரியம்மனது வரலாறு மெய்சிலிர்க்க வைக்கும் வகையில் அமைந்துள்ளதாக புராணங்கள் கூறுகின்றன.அக்காலத்தில் வண்ணார் சமுதாயத்தைச் சார்ந்த கணவன் மனைவியும் சலவைத் துணி துவைப்பதற்காக ஒரு பெரிய மலை கீழ் அமைந்து இருந்த ஆற்றில் துணி சலவை செய்ய எடுத்து சென்றனர்.அப்போது அந்த பெண் நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.பின் சலவை துணி துவைக்கும் வேளையில் கடுமையான மழை பெய்து கொண்டு இருந்தது. அந்த சமயத்தில் அந்த பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டு உள்ளது.பின் அந்தக் கணவனோ தான் சலவைக்கு கொண்டு வந்த சேலைகளை கொண்டு நால்புறமும் கட்டி தன் மனைவிக்கு தானே பிரசவம் பார்த்துள்ளார்.இரு பெண் குழந்தைகள் பிறந்ததாக புராண வரலாறும் செவி வழி வரலாறுமாக உள்ளது.பின் ஒரு குழந்தையை அவர் தூக்கியதாகவும் மற்றொரு குழந்தையை இருவராலும் தூக்க முடியவில்லை.பின் அவர்கள் அந்த குழந்தையை அருகில் இருந்த தாழியில் வைத்துவிட்டு மூவரும் சென்று நடந்ததை ஊர் கவுண்டரிடம் முறையிட்டுள்ளனர்.பின் அவர்களுடன் அந்த குழந்தை இருக்குமிடம் சென்று அந்த குழந்தையே தூக்க முடியவில்லை.பின் இரும்பு கடப்பாரை கொண்டு அந்த தாழியை தூக்க முற்பட்டனர்.அப்போது அந்த குழந்தையின் வலது மார்பில் கடப்பாரை பட்டு இரத்தம் கசிந்துள்ளது.(அதை இன்றளவும் நாம் பூசையில் உண்ணிப்பாக கவனித்தால் அம்மனின் வலது மார்பில் சிறு காயங்கள் தென்படும்).அந்த தாழியின் உள்ளையே இருந்த குழந்தை காலையில் சென்று பார்க்கும் பொழுது பெண் குழந்தை வடிவாகவே அம்மனாக எழுந்தருளி இருந்தது.அம்மனே கனவில் வந்து தனக்கு திருவிழா நடத்த வேண்டும் என்றும் கூறியதாக வரலாறு கூறுகிறது. பின் ஊர் திருவிழா அன்று அனைவரும் கொங்கு நாட்டு வழக்கப்படி பச்சை மாவு எடுத்து வடக்கு திசையில் சென்றனர்.அப்போது அந்த சலவைத் தொழிலாளி பெண் தனது குடும்ப வறுமை காரணமாக பச்சைமாவுக்கு பதில் புளியங்கொட்டையைக் கொண்டு இடித்து அதில் மாவு செய்து தெற்கு நோக்கி கொண்டு சென்றிருந்தாள்.அந்த புளிமாவுக்காக அம்மனே வடக்கிலிருந்து தெற்கு நோக்கி திரும்பி காட்சியளித்தது. அது இன்றளவும் அம்மனின் அமைப்பு அப்படியே உள்ளது.இது இன்றளவும் வண்ணார் சமுதாய கடவுளாக, வண்ணார் பெண்ணாக காணப்படுகிறது,மேலும் கோவில் நிர்வாகம் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
வழிபாடு
திருவிழா
- Panguni Kundam festival
செல்லும் வழி
ஆதாரங்கள்
விவரங்கள் விக்கிமீடியா திட்டங்களிலிருந்தும் வெளியிடப்பட்ட கோயில் ஆதாரங்களிலிருந்தும் தொகுக்கப்பட்டவை. தவறு இருந்தால் திருத்தம் அனுப்புங்கள்.