உள்ளடக்கத்துக்குச் செல்
அம்ச துர்கா
மேலக்கடம்பூர்

சைவக் கோயில்

மேலக்கடம்பூர்

Kadambur

மேலக்கடம்பூர், தமிழ்நாடு, இந்தியா

விவரங்கள் விக்கிமீடியா திட்டங்களிலிருந்தும் வெளியிடப்பட்ட கோயில் ஆதாரங்களிலிருந்தும் தொகுக்கப்பட்டவை. தவறு இருந்தால் திருத்தம் அனுப்புங்கள். திருத்தம் தெரிவிக்கவும்

மேலோட்டம்

அமிர்தகடேஸ்வரர்

அம்பாள் சோதிமின்னம்மை

சுயம்பு லிங்கம்

சைவக் கோயில்

சோழர் கட்டிடக்கலைதிராவிடக் கட்டிடக்கலை

தேவர்களும் அசுரர்களும் திருப்பாற்கடலை கடைந்து அமுத கலசம் பெற்றனர். முழு முதற்கடவுளான விநாயகரை வழிபடாமல் அமுதுண்ண அமர்கின்றனர். அவர்களுக்கு பாடம் புகட்ட எண்ணிய விநாயகர் அமுதகலசத்தினை பூலோகத்தில் மறைத்து வைக்க எடுத்துவரும் வழியில் ஒரு துளி அமிர்தம் கடம்பவன காட்டில் வீழ்ந்து சுயம்பு லிங்கமாக மாறியது. அவரே இத்தல அமிர்தகடேசுவரர். பிற்காலத்தில் கடம்பவனம் கடம்பூர் என வழங்கப்படலாயிற்று. தல மரமும் கடம்ப மரமாக ஆனது. இத்திருக்கோயிலை இந்திரனின் தாய் தினம்தோறும் வந்து வழிபட்டாள். தன் தாயின் கடமையை எளிதாக்க எண்ணி இந்திரன் இத்தல இறைவனையும், பிற தெய்வங்களையும் அழகிய தேரில் வைத்து எடுத்து செல்ல முற்பட்டான். தலவினாயகரின் அனுமதி பெறாமல் காரியம் செய்ய முற்பட்டதால் விநாயகர் அவன் ஆணவத்தினை அடக்க விசுவரூபம் எடுத்து அவன் தேரினை காலால் அழுத்த, தேர் கல்லாய் சமைந்தது. பிழை உணர்ந்த இந்திரன் பாப விமோசனம் கோருகிறான். ஒரு நாழிகையில் கோடி லிங்கம் பிரதிட்டை செய்ய ஆணையிடுகிறார்; செய்ய இயலாமல் போகவே ருத்திர கோடி ஜபம் செய்து ஒரு லிங்கம் பிரதிட்டை செய்து பிழைநிவர்த்தி பெறுகிறான். ருத்ரகோடி ஜபம் செய்து பிரதிட்டை செய்த அக்கோயில் இத்தலத்தின் கிழக்கே ஒரு கி.மீ. தூரத்தில் ருத்ரகோடீச்வரர் ஆலயம் என்ற பெயரில் விளங்குகிறது. அப்பர் தேவாரத்தில் “கடம்பூர் இளங்கோயில் தன்னில் கயிலாய நாதனை காணலாமே” எனப் போற்றுகிறார். நீண்ட காலமாய் சிதிலமடைந்திருந்த இக்கோயில் தமிழக தொல்பொருள் துறை மூலம் புதுப்பிக்கப்பட்டு விமான கட்டுமானம் இன்றி காட்சி தருகிறது.

வரலாறும் மரபும்

பதிகம்

பதிக எண் இன்னும் பதியப்படவில்லை.

தல விருட்சம்

கடம்ப மரம்

தீர்த்தம்

  • சிவதீர்த்தம், சக்தி தீர்த்தம் · கோயில் குளம்

செல்லும் வழி

ஆதாரங்கள்

விவரங்கள் விக்கிமீடியா திட்டங்களிலிருந்தும் வெளியிடப்பட்ட கோயில் ஆதாரங்களிலிருந்தும் தொகுக்கப்பட்டவை. தவறு இருந்தால் திருத்தம் அனுப்புங்கள்.

கூடுதல் இணைப்புகள்