உள்ளடக்கத்துக்குச் செல்
அம்ச துர்கா
மாமல்லபுரம்

சைவக் கோயில்

மாமல்லபுரம்

Mahabalipuram

மாமல்லபுரம், செங்கல்பட்டு மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா

விவரங்கள் விக்கிமீடியா திட்டங்களிலிருந்தும் வெளியிடப்பட்ட கோயில் ஆதாரங்களிலிருந்தும் தொகுக்கப்பட்டவை. தவறு இருந்தால் திருத்தம் அனுப்புங்கள். திருத்தம் தெரிவிக்கவும்

இந்த விவரம் ஆங்கிலத்தில் உள்ளது.

மேலோட்டம்

சிவன்

லிங்கம்

சைவக் கோயில்

தொல்லியல் களம்திராவிடக் கட்டிடக்கலைபல்லவக் கட்டிடக்கலை

மார்க்கோபோலோ மற்றும் அவருக்குப்பின் ஆசியாவிற்கு வந்த ஐரோப்பிய வணிகர்கள் இந்த இடத்தை ஏழு அடுக்கு தூபிகள் என்று அழைத்தனர். அந்த ஏழு அடுக்கு தூபிகளில் ஒன்று இந்தக் கடற்கரை கோயில் என்று நம்பப்படுகிறது. இக்கோயிலானது அவர்களது கப்பல்களுக்கு ஒரு கலங்கரை விளக்கம் போல ஒருவேளை செயல்பட்டிருக்கலாம். இக்கோயிலானது அடுக்கு தூபி போல காணப்படுவதால், அடுக்கு தூபி எனும் பெயர் கப்பல் மாலுமிகளுக்கு நன்றாக அறிந்த பெயராகி போனது. பொ.ஊ. 7 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலிருந்து மன்னன் இரண்டாம் நரசிம்மவர்மன் குகைக் கோயில்கள் மற்றும் ரதங்கள் உள்ளிட்ட பல கட்டடக் கலை படைப்புகளை ஆரம்பித்து வைத்தார். அந்த கட்டடக்கலை படைப்புகளின் உச்ச நிலையாக இந்த கட்டமைப்பு கோயில் வளாகம் கருதப்படுகிறது. குடைவரை கோயில் அமைப்புகளை செதுக்கும் கட்டடக்கலை படைப்பானது பின்வந்த காலங்களில் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. அதனை நாம் அதிரனசந்த குகை, பிடாரி இரதங்கள் மற்றும் புலிக்குகை ஆகியவற்றின் மூலம் அறியலாம். கடற்கரை கோயில் என்று அழைக்கப்படும் இந்த கோயில் வளாகத்தின் நேர்த்தியான கட்டமைப்பை ஏற்படுத்தியதில் முக்கியப் பங்கு, மன்னன் ராஜசிம்மன் (பொ.ஊ. 700–28) என்று அழைக்கப்பட்ட பல்லவ அரசமரபின் இரண்டாம் நரசிம்மவர்மனையே சாரும். கடலில் மூழ்கிப்போன கோயில் வளாகங்களில் மீதமிருக்கும் கடைசி கோயில் வளாகம் என்று இது இப்போது ஊகிக்கப்படுகிறது; 2004 ஆம் ஆண்டு சுனாமி தாக்கியபோது இந்த கோயில் வளாகத்துடன் தொடர்புடைய கடலில் மூழ்கிப்போன எஞ்சிய கோயில்களின் அமைப்பானது வெளியே தெரிந்தது. கடற்கரைக் கோயிலின் கட்டட அமைப்பானது அவர்களை வெற்றிகொண்டு தமிழகத்தை ஆண்ட சோழர்களாலும் சோழர்கள் கட்டிய கோயில்களில் பின்பற்றப்பட்டது.

வரலாறும் மரபும்

காலம்
Present structure completed c. 725 AD. Built by Narasimhavarman II, Pallava dynasty.
முதற் குறிப்பு
7-ஆம் நூற்றாண்டு
பாரம்பரிய அந்தஸ்து
UNESCO
தல புராணம்

மார்க்கோபோலோ மற்றும் அவருக்குப்பின் ஆசியாவிற்கு வந்த ஐரோப்பிய வணிகர்கள் இந்த இடத்தை ஏழு அடுக்கு தூபிகள் என்று அழைத்தனர். அந்த ஏழு அடுக்கு தூபிகளில் ஒன்று இந்தக் கடற்கரை கோயில் என்று நம்பப்படுகிறது. இக்கோயிலானது அவர்களது கப்பல்களுக்கு ஒரு கலங்கரை விளக்கம் போல ஒருவேளை செயல்பட்டிருக்கலாம். இக்கோயிலானது அடுக்கு தூபி போல காணப்படுவதால், அடுக்கு தூபி எனும் பெயர் கப்பல் மாலுமிகளுக்கு நன்றாக அறிந்த பெயராகி போனது. பொ.ஊ. 7 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலிருந்து மன்னன் இரண்டாம் நரசிம்மவர்மன் குகைக் கோயில்கள் மற்றும் ரதங்கள் உள்ளிட்ட பல கட்டடக் கலை படைப்புகளை ஆரம்பித்து வைத்தார். அந்த கட்டடக்கலை படைப்புகளின் உச்ச நிலையாக இந்த கட்டமைப்பு கோயில் வளாகம் கருதப்படுகிறது. குடைவரை கோயில் அமைப்புகளை செதுக்கும் கட்டடக்கலை படைப்பானது பின்வந்த காலங்களில் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. அதனை நாம் அதிரனசந்த குகை, பிடாரி இரதங்கள் மற்றும் புலிக்குகை ஆகியவற்றின் மூலம் அறியலாம். கடற்கரை கோயில் என்று அழைக்கப்படும் இந்த கோயில் வளாகத்தின் நேர்த்தியான கட்டமைப்பை ஏற்படுத்தியதில் முக்கியப் பங்கு, மன்னன் ராஜசிம்மன் (பொ.ஊ. 700–28) என்று அழைக்கப்பட்ட பல்லவ அரசமரபின் இரண்டாம் நரசிம்மவர்மனையே சாரும். கடலில் மூழ்கிப்போன கோயில் வளாகங்களில் மீதமிருக்கும் கடைசி கோயில் வளாகம் என்று இது இப்போது ஊகிக்கப்படுகிறது; 2004 ஆம் ஆண்டு சுனாமி தாக்கியபோது இந்த கோயில் வளாகத்துடன் தொடர்புடைய கடலில் மூழ்கிப்போன எஞ்சிய கோயில்களின் அமைப்பானது வெளியே தெரிந்தது. கடற்கரைக் கோயிலின் கட்டட அமைப்பானது அவர்களை வெற்றிகொண்டு தமிழகத்தை ஆண்ட சோழர்களாலும் சோழர்கள் கட்டிய கோயில்களில் பின்பற்றப்பட்டது. சோழமண்டல கடற்கரையை தாக்கிய 2004 ஆம் ஆண்டு சுனாமி முழுவதுமாக கருங்கற்களைக் கொண்டு கட்டப்பட்ட சிதைந்துபோன ஒரு பழைய கோயிலை வெளிக்காட்டியது. இந்நிகழ்வு ஐரோப்பியர்கள் தங்களது டைரிகளில் ஏழு அடுக்கு தூபிகள் என்று குறிப்பிட்ட பகுதியின் ஒரு பகுதியே மகாபலிபுரம் என்ற ஊகத்தை புதுப்பித்தது அந்த ஏழு அடுக்கு தூபிகளில் 6 கோயில்கள் கடலுக்குள் மூழ்கியே இருக்கின்றன. சுனாமியானது மேலும் சில பண்டைய சிங்கங்கள், யானைகள் மற்றும் மயில்களின் கற்சிற்பங்களை வெளிக்காட்டியது. இச்சிற்பங்கள் 7 மற்றும் 8 ஆம் நூற்றாண்டுகளில் பல்லவர் காலத்தின் போது சுவர்கள் மற்றும் கோயில்களை அலங்கரிக்க பயன்படுத்தப்பட்டன. 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் தேதியன்று இந்திய பெருங்கடலில் ஏற்பட்ட சுனாமியானது கோயில் மற்றும் அதனை சுற்றி இருந்த தோட்டத்தை தாக்கிய போதும் கடற்கரைக் கோயிலானது பெரிய அளவிற்கு சேதத்திற்கு உள்ளாகவில்லை. ஏனெனில் நீர் மட்டமானது சில நிமிடங்களிலேயே சாதாரண நிலைக்குத் திரும்பியது. கோயிலின் அடித்தளமானது கடினமான கருங்கற்களால் கட்டப்பட்டிருந்ததால் சுனாமியால் உருவான அலைகளை தாக்குப் பிடித்தது. கோயிலைச் சுற்றி கடற்கரையில் எழுப்பப்பட்டிருந்த தடுப்பு அமைப்புகளும் பாதுகாப்பிற்கு உறுதுணையாக இருந்தன.

செல்லும் வழி

ஆதாரங்கள்

விவரங்கள் விக்கிமீடியா திட்டங்களிலிருந்தும் வெளியிடப்பட்ட கோயில் ஆதாரங்களிலிருந்தும் தொகுக்கப்பட்டவை. தவறு இருந்தால் திருத்தம் அனுப்புங்கள்.

கூடுதல் இணைப்புகள்