வரலாறும் மரபும்
- முதற் குறிப்பு
- 10-ஆம் நூற்றாண்டு
தல புராணம்
மன்னார்குடிக் கல்வெட்டுகளில் இக்கோயிலின் பெயர் “இராசாதிராச விண்ணகர்” என்று குறிக்கப்படுவதாள், இக்கோயில் சோழப் பெருவேந்தன் இராசாதிராசன் பெயரால் ஏற்படுத்தப்பட்டவொன்று ஆகும். முதற் குலோத்துங்க சோழன் காலத்திலிருந்தே இக்கோயில் இறைவனுக்கு “வண்டு வராபதி ஆழ்வார்” என்ற பெயர் வழங்கி வந்திருக்கின்றது. நான்கு வேதங்களையும் கற்றுணர்ந்த பெரியோர்கள் இங்கு வாழ்ந்தமையால் ராஜாதி ராஜ சதுர்வேதி மங்கலம் என்றும், செண்பக மரங்கள் அடர்ந்த காடுகள் நிறைந்து காணப்பட்டதனால் சென்பகாரண்யா க்ஷேத்திரம் எனவும், குலோத்துங்க சோழன் இக்கோயிலை அமைத்தபடியால் குலோத்துங்க சோழ விண்ணகரம் என்றும், ஸ்ரீ ராஜகோபாலன் கோயில் கொண்டிருப்பதால் ராஜமன்னார்குடி என்றும், மன்னர்கள் கோபாலனுக்கு கோயில் கட்டியதால் மன்னார்கோயில் என்றும், இவ்வூர் அழைக்கப்படுகிறது. ===கட்டமைப்பு=== இந்தக் கோவில் முதலாம் குலோத்துங்க சோழனால் சுண்ணாம்புக் கலவை மற்றும் செங்கல் கொண்டு பொ.ஊ. 1070-1125-இல் கட்டப்பட்டது. மன்னார்குடி ஸ்ரீ ராஜாதி ராஜா சதுர்வேதி மங்கலம் என குறிப்பிடப்படுகிறது, மேலும் மன்னார்குடி நகரம் கோவில் சுற்றி வளரத் தொடங்கியது. கோவில் கல்வெட்டில் முதலாம் குலோத்துங்க சோழன் காலத்தில் காசு கொள்ளா இறையிலியாக நிலம் வழங்கப்பட்டிருந்திருக்கிறது. முதலாம் குலோத்துங்கசோழனின் ஆட்சிக்காலத்தில் இப்பெருமான் கோயிலின் முன்னால் மாமரம் ஒன்றிருந்திருக்கிறது. இம்மாமரத்தின் கீழே பொ.ஊ. 1018-இல் இராசாதிராசச் சதுர்வேதிமங்கலத்து சபையார் கூடி காடு, நாடு, நகரம், கள்ளப்பற்று ஆகியவற்றில் 30,000 காசுகள் வகுலித்துக் கோயிலுக்குக் கொடுக்க முடிவு செய்துள்ளனர்.
