வரலாறும் மரபும்
தல விருட்சம்
வன்னி
தீர்த்தம்
- மங்கள தீர்த்தம் · கோயில் குளம்
சைவக் கோயில்
Penu Perunturai
திருப்பந்துறை, தமிழ்நாடு, இந்தியா
விவரங்கள் விக்கிமீடியா திட்டங்களிலிருந்தும் வெளியிடப்பட்ட கோயில் ஆதாரங்களிலிருந்தும் தொகுக்கப்பட்டவை. தவறு இருந்தால் திருத்தம் அனுப்புங்கள். திருத்தம் தெரிவிக்கவும்
வெளியிடப்பட்ட தலப் பட்டியலிலிருந்து எடுத்த குறுகிய பதிவு. பதிக எண், தல புராணம், செல்லும் வழி இந்தப் பக்கத்தில் இல்லை.
சிவானந்தேஸ்வரர்
அம்பாள் மங்களாம்பிகை, மலையரசி
லிங்கம்
சைவக் கோயில்
பிரம்மனை சிறையிலடைத்ததும், சிவனுக்கு உபதேசம் செய்துவிட்டதும் முருகனுக்கு அகங்காரத்தை ஏற்படுத்தியதாம். இதனால் கோபம் கொண்ட சரஸ்வதி முருகனை ஊமையாக்கிவிட்டாரம். வருந்திய முருகன், தனக்கு பேச்சு கிடைப்பதற்காக திருப்பந்துறையில் சிவலிங்கம் அமைத்து, பூஜை செய்து தவத்தில் ஈடுபட்டார். முருகனது தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான் பேசும் திறனை கொடுத்தருளினார். இதனால் இத்தல இறைவன் பிரணவேஸ்வரர் ஆனார் என ஒரு வரலாறு இத்தலத்திற்கு உண்டு என்பது தொன் நம்பிக்கை. ஸ்வாமி சந்நதிக்கு அருகிலேயே வடதிசை நோக்கி சின்முத்திரையோடு தியானம் செய்யும் நிலையில் தண்டபாணியின் வடிவம் இருக்கிறது. இன்றும் இந்த ஊரில் பிறக்கும் குழந்தைகள் ஊமையாகப் பிறப்பதில்லை. முருகப்பெருமானே இங்கு பேசும் பாக்கியம் பெற்றதால் பேச்சு சரியாக வராத குழந்தைகளை பெற்றோர்கள் இங்கு கூட்டி வந்து போவதை இன்றும் பார்க்கலாம். கோயிலில் உள்ள பிட்சாடனர் சிறப்பான மூர்த்தியாவார், ஒவ்வொரு வருடமும் சித்திரை மாத பரணி நட்சத்திரத்தன்று இவருக்கு அமுது படையல் திருவிழா நடக்கிறது. இங்குள்ள மங்கள தீர்த்தக்கரையில் குக விநாயகர், சாட்சி விநாயகர் என்னும் இரட்டை விநாயகர் சன்னதிகள் காணப்படுகின்றன.
வன்னி
விவரங்கள் விக்கிமீடியா திட்டங்களிலிருந்தும் வெளியிடப்பட்ட கோயில் ஆதாரங்களிலிருந்தும் தொகுக்கப்பட்டவை. தவறு இருந்தால் திருத்தம் அனுப்புங்கள்.