வரலாறும் மரபும்
- கட்டடம்
- Dravidian architecture
- கல்வெட்டு
- available
தல புராணம்
இத்தலத்திற்கு இராமர் வந்து வழிபட்டதாக செவிவழிக்கதைகள் கூறுகின்றன. இலங்கையில் இராமன் இராவணனைக் கொன்ற கொலைப்பாவம் அதாவது பிரம்மகத்தி தோசம் நீங்க இங்கு எழுந்தருளியுள்ள இறைவனை வழிபட்டதாக வரலாறு கூறுகிறது. இராமன் வழிபட்டதால் இது இராமநந்தீசுவரம் என்றும் அழைக்கப்படுகிறது. இராமர் இத்தலத்திற்கு வந்தபோது நந்தி தடுத்ததாகவும், அம்பாள் கருணை கொண்டு நந்தியை தடுத்து, இராமருக்கு காட்சி தந்ததாகவும் பின்பு இராமர் தீர்த்தத்தில் நீராடி ஈசனை வழிபட்டதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் இராம நந்தீசுவரம் என்பது மருவி இராமநதீசுவரம் ஆயிற்று என்போரும் உண்டு. இதற்குச் சான்றாக இத்தலத்திற்குரிய சோமாசுகந்த மூர்த்தத்தில் நந்திதேவர் உள்ளார். நுழைவாயிலைக் கடந்து உள்ளே செல்லும்போது கோயிலின் இடப்புறத்தில் இறைவி சன்னதி உள்ளது. மூலவர் கருவறை கோட்டத்தில் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், துர்க்கை ஆகியோர் உள்ளனர். திருச்சுற்றில் கணபதி, வள்ளி தெய்வானை சுப்பிரமணியர், மகாலட்சுமி, சண்டிகேசுவரர், சரிவார்குழலி அம்மன் ஆகியோரின் சன்னதிகள் உள்ளன. நந்தன ஆண்டு ஐப்பசி 26-ஆம் நாள், 11.11.2012 ஞாயிறு அன்று குடமுழுக்கு ஆனதற்கான கல்வெட்டு கோயிலில் உள்ளது.
தல விருட்சம்
வில்வமரம், சம்பகமரம்
தீர்த்தம்
- இராம தீர்த்தம் · கோயில் குளம்
