வரலாறும் மரபும்
- காலம்
- Built by Pandyas, Cholas, Travancore.
- கட்டடம்
- Dravidian architecture
தல புராணம்
:கயிலையில் மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாண வைபவத்தின் போது வடதிசை தாழ்ந்து தென்திசை உயந்தது. இறைவன் அகத்தியரை நோக்கி தென்திசைக்கு சென்று வடதிசைக்கு சமனாய் பொதிகையில் வாழக்கடவாய் என ஆணையிட்டார். அப்போது முனிவர் இறைவனின் திருக்கல்யாண வைபவத்தயும் திருநடனத்தையும் காண இயலாதே என வருந்த இறைவன் திரிகூடமலையின் மகிமையை கூறி அங்கு விஷ்ணுவாயிருந்த தம்மை சிவலிங்கமாக்கி மகுடாகமப்படி பூசித்து வழிபட தம் கல்யாண வைபவத்தையும் நடனத்தையும் கானலாம் என் கூறி அனுப்பி வைத்தார். அகத்தியரும் அவ்வாரே தென்திசை சென்று வைணவர் வேடம் பூண்டு கோயிலுள் சென்று விஷ்னுவை வேதமந்திரத்தால் சிவலிங்கமாக்கி வழிபட்டார், அன்று முதல் இக்கோயில் சிவதலமாக உள்ளது என்பது புராண வரலாறு கூறுகின்றது. === நன்நகரப்பெருமாள் === வைணவர்கள் விஷ்ணு மூர்த்தியை கானாது திகைத்து அகத்தியரை நிந்தித்தனர். முனிவர் அவர்களிடம் கோயிலின் தென்மேற்கு மூலையில் வைத்து பூசைசெய்யுங்கள் அரியும் சிவனும் ஒன்றே வேறுபாடு காட்டாதீர்கள் என உரைத்தார். :முத்தனே முளரிக்கண்ணா மூலமென்றழைத்த வேழப் :பத்தியி னெல்லைகாகும் பகவனெ திகிரியாளா :கத்தனே யருள்சூற்கொண்டகந்தரக் கருப்பினானே :நத்தணி செவியகோல நாடுதற் கரியநம்பி === தைலமுழுக்கு === அகத்தியர் திருமாலை சிவனாக்க தன் கைகளால் தொட்டதால் சிவலிங்கத்தின் தலைப்பாகத்தில் ஐந்து விரல்களும் பதிந்த வடு உள்ளது. முனிவர் தொட்டு அமுக்கியதால் உண்டான தலைவலி நீங்கவே இன்றும் சிவலிங்கத்திற்கு தைல அபிசேகம் நடைபெறுகின்றது. இறைவனுக்கு அபிசேகம் செய்யப்பட்ட மகாசந்தனாதித்தைலம் கோயில் அலுவலகத்தில் விற்பனை செய்யப்படுகின்றது. இது பல மூலிகைகைகள், வேர்கள் மற்றும் மருந்துகள் சேர்த்து மருத்துவ முறைப்படி பக்குவமாக காய்ச்சப்படுகின்றது. இது தலைவலி, வயிற்றுவலி சயரோகம் முதலான கொடிய நோய் தீர்க்கும் மருந்தாக பயன்படுகின்றது. === கோயிலின் புராணப்பெயர்கள் === இவ்வூருக்கு வழங்கப்படும் வேறு பெயர்களாகத் தலபுராணத்தில் குறிப்பிடப்படும் பெயர்கள்: * பிதுர் கண்டம் தீர்த்த புரம் * சிவத்துரோகம் தீர்த்த புரம் * மதுவுண்டான் உயிர் மீட்ட புரம் * பவர்க்க மீட்ட புரம் * வசந்தப் பேரூர் * முதுகங்கை வந்த புரம் * செண்பகாரணிய புரம் * முக்தி வேலி * நதிமுன்றில் மாநகரம் * திருநகரம் * நன்னகரம் * ஞானப்பாக்கம் * வேடன் வலஞ்செய்த புரம் * யானை பூசித்த புரம் * வேத சக்தி பீட புரம் * சிவ முகுந்த பிரம புரம் * முனிக்கு உருகும் பேரூர் * தேவகூட புரம் * திரிகூடபுரம் * புடார்ச்சுனபுரம் * குறும்பலா விசேட புரம்
தல விருட்சம்
குறும்பலா
தீர்த்தம்
- சிவகங்கை, வட அருவி, சித்ரா நதி · கோயில் குளம்
