வரலாறும் மரபும்
- கட்டடம்
- Tamil architecture
- முதற் குறிப்பு
- 9-ஆம் நூற்றாண்டு
பதிகம்
பாசுரம் இன்னும் பதியப்படவில்லை.
.jpg?width=480)
வைணவக் கோயில்
Thirumaliruncholai
மதுரை, மதுரை மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா
விவரங்கள் விக்கிமீடியா திட்டங்களிலிருந்தும் வெளியிடப்பட்ட கோயில் ஆதாரங்களிலிருந்தும் தொகுக்கப்பட்டவை. தவறு இருந்தால் திருத்தம் அனுப்புங்கள். திருத்தம் தெரிவிக்கவும்
இந்த விவரம் ஆங்கிலத்தில் உள்ளது.
கள்ளழகர்
தாயார் Sundaravalli
வைணவக் கோயில்
இந்து புராணத்தின்படி, ஒரு சமயம் சுதபஸ் முனிவர் என்பவர் அழகர் மலையில் உள்ள நூபுர கங்கையில் குளித்துக் கொண்டிருந்தார். அந்த வழியாகச் சென்ற துர்வாச முனிவரைக் அவர் கவனிக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த துர்வாசர், சுதபஸ் முனிவரை தவளையாக மாறுமாறு சபித்தார். கள்ளழகர் என்று அழைக்கப்படும் சுந்தரராஜ பெருமாள் அவதரித்து இச்சாபத்தில் இருந்து சுதபஸ் முனிவரை மீட்டெடுப்பார் என்றும் கூறி மறைந்தார். தவளை வடிவம் காரணமாக ‘மண்டூக மகரிஷி’ என்று பெயர் பெற்ற சுதபஸ் முனிவர், தேனூரில் வேகவதி என்று அழைக்கப்படும் வைகை நதிக்கரையில் தவம் செய்தார். மண்டூக மகரிஷியினை சாபத்திலிருந்து விமோசனமளிக்க எண்ணி பெருமாள் அழகர் மலையில் உள்ள தனது உறைவிடத்திலிருந்து இறங்கி வந்தார். அதுமுதல் மலைப்பட்டி, அலங்காநல்லூர், வயலூர் வழியாக கள்ளழகர் தேனூருக்கு வருவதாக நம்பப்படுகிறது. தேனூர் மண்டபத்தில் இறைவன் முனிவருக்கு சாப விமோசனம் தந்து அவரை மீட்டபின்னர் தனது இருப்பிடத்திற்குச் திரும்பிச் செல்வதாக ஐதீகம். திருமலை நாயக்கர் ஆட்சியின் போது (பொ.ஊ. 1623–1659), மண்டூக மகரிஷியின் சாப விமோசன நிகழ்ச்சிகள் வண்டியூர் கிராமத்திற்கு மாற்றப்பட்டது. 1653-ம் ஆண்டு முதல் அங்கு திருமலை நாயக்கரால் கட்டப்பட்ட தேனூர் மண்டபத்தில் இந்நிகழ்வு நடத்தப்பட்டு வருகிறது. கள்ளழகர் மரணத்தின் கடவுளான யமனால் வணங்கப்பட்டார் என்கிறது மற்றொரு இந்து புராணம். அவர் அந்த இடத்தில் பெருமாளை நிரந்தரமாகத் தங்கும்படி வேண்டிக் கொண்டார் என்றும் தேவர்களின் கட்டிடக் கலைஞரான விஸ்வகர்மாவின் உதவியுடன் அங்கு ஒரு கோயிலைக் கட்டினார் என்றும் நம்பப்படுகிறது.
பாசுரம் இன்னும் பதியப்படவில்லை.
விவரங்கள் விக்கிமீடியா திட்டங்களிலிருந்தும் வெளியிடப்பட்ட கோயில் ஆதாரங்களிலிருந்தும் தொகுக்கப்பட்டவை. தவறு இருந்தால் திருத்தம் அனுப்புங்கள்.