வரலாறும் மரபும்
தல புராணம்
left|100x150px|thumb|மூலவர் விமானம் சிவபெருமானின் பக்தர்களான தம்பதியர் வடகுரங்காடுதுறை தலத்திற்கு வந்தனர். அவள் கருவுற்றிருந்தாள். நெடிய பயணத்தில் அவர்களுக்கு நாவறட்சி ஏற்பட்டிருந்தது. அவள் கணவன் தண்ணீரை தேடிச் சென்றான். நேரம் ஆகியதால் அவள் மேலும் சோர்வுற்றாள். எனவே கோயிலின் தென்னைமரம் வளைந்து குலையைச் சாய்த்து. இறைவன் பணியாள் போல வந்து அவளுக்கு இளநீரை சீவித் தந்தான். அவள் அயர்ந்து உறங்கினாள். தண்ணீருடன் வந்த கணவனிடம் நடந்ததை எடுத்துரைத்தாள். நம்ப மறுத்த கணவனுக்கு இறைவன் இறைவியோடு தரிசனம் தந்து உண்மையை உரைத்தார். இத்தலத்தல் வாலி வணங்கியமையால் வடகுரங்காடுதுறை என்றும், சுக்ரீவன் வழிபட்ட தலம் தென்குரங்காடுதுறை என்றும் அழைக்கப்படுகிறது. அனுமனும் இத்தலத்தில் பூசை செய்துள்ளார். சிட்டுக்குருவியொன்று இத்தலத்திற்கு அருகேயுள்ள நீர்நிலையிலிருந்து அலகால் நீர் கொணர்ந்து இறைவனுக்கு அபிசேகம் செய்துள்ளது. அதனால் மகிழ்ந்த இறைவன் அக்குருவிக்கு முக்தியளித்தார்.
தல விருட்சம்
தென்னை
