வரலாறும் மரபும்
- கட்டடம்
- Dravidian architecture
- முதற் குறிப்பு
- 7-ஆம் நூற்றாண்டு
தல புராணம்
ஒன்பது கிரகங்களுள் (நவக்கிரகம்) ஒன்றான அங்காரகன், தொழுநோயால் மிகத்தீவிரமாகப் பாதிக்கப்பட்டதின் விளைவாகக் கடவுள் சிவனார் வைத்தியநாத சுவாமியாக எழுந்தருளி அவரின் பிணிதீர்த்தார். ஆகையால் இக்கோயில் ஒன்பது கிரக கோயில்களில் இது செவ்வாய் கிரகத்தைக் குறிக்கும் கோயில் தலமாக விளங்குகின்றது. என்னும் அப்பர் பெருமானின் தேவாரப் பகுதியில் இறைவன் வைத்திய நாதர் என்னும் பெயர் பூண்ட காரணத்தைப் புலப்படுத்துவதாகும். திருநாவுக்கரசர் தீவிர வயிற்றுப்பிணியினால் அவதியுற்றபொழுது அவர் தமக்கையார் வைத்தியநாதனை நினைந்து பிணிநீக்க தொழுதிட்டார், அவ்வாறே எழுந்தருளி பிணிநீக்கினார். அன்று முதல் இத்தல சிவனாரை அவரின் பக்தகோடிகளால் வைத்தியநாதன் என்றழைக்கபெற்று வழிபடலாயினர். === கல்வெட்டு === தமிழ் ஆண்டு சகம் 1814 (பொ.ஊ. 1891 ஜூன் 26) நாட்டுக்கோட்டை நகரத்தாரால் திருப்பணியும் குடமுழுக்கும் செய்யப்பட்டன. தமிழ் ஆண்டு சகம் 1689 (பொ.ஊ. 1767) ராசாமகாராசர் காலத்தில் முத்துக்குமாரசாமித் தம்பிரானால் திருப்பணி செய்யப்பட்டது. தமிழ் ஆண்டு சகம் 1682 (பொ.ஊ. 1770) துளசாமகாராசர் காலத்தில் கருங்கல் திருப்பணி செய்யப்பட்டது. தமிழ் ஆண்டு சகம் 1802 (பொ.ஊ. 1880) கொடிக்கம்பம் தங்கமயம் ஆக்கப்பட்டது என்று கோயில் கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளது.
தல விருட்சம்
வேம்பு
தீர்த்தம்
- சித்தாமிர்தம் · கோயில் குளம்
.jpg?width=480)